districts

காளையார்கோவிலில் இருந்த 7 கிராமங்களை மானாமதுரை தாலுகாவோடு இணைத்து அரசு உத்தரவு பொதுமக்கள் மகிழ்ச்சி

சிவகங்கை, டிச.7- காளையார்கோவில் தாலுகா வில் இருந்த 7 கிராமங்களை, மானா மதுரை தாலுகாவோடு இணைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

10 ஆண்டுகள் நடந்த  போராட்டத்தி ற்கு பின்பு கிடைத்த வெற்றி என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  சிவகங்கை வட்டத்தில், புளி யங்குளம் கிராமத்துக்கு உட்பட்ட விளாக்குளம், பில்லத்தி, கீழமா யளி, மேலமாயாளி, புளியங்குளம் ஆகிய 5 கிராமங்கள் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட கே. பெருங்கரை, என். பெருங்கரை, வேலானி ஆகிய 3 கிராமங்கள், கீழப்பிடாவூர் வருவாய் கிராமத்து க்கு உட்பட்ட 9 கிராமங்கள் இருந்தன.  கடந்த 2015 ஜூன் 2 காளை யார்கோவில் தாலுகாவோடு இணைக்கப்பட்டிருந்தது.

 அப்போது, இந்த 9 கிராமங்க ளில் பில்லத்தி, 2 மற்ற 7 கிராமங்க ளைச் சேர்ந்த மக்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண் மைத் துறை, வட்ட வழங்கல் அலு வலகம் மானாமதுரையில் அமைந் துள்ளன. அதேநேரம், வட்டாட்சி யர் செல்ல மானாமதுரை, சிவ கங்கை வழியாக 3 பேருந்துகள் மாறி காளையாரகோவில் சென்று கொண்டிருந்தனர்.  இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்களது கிராமங்களை அருகே உள்ள மானாமதுரையோடு இணைக்க வேண்டும் என்று பத்து ஆண்டுகளாக போராடி வந்தனர்.

இதன் காரணமாக இப்போது மக்கள் அலைந்து சென்று தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய அவல நிலை இல்லை. இதனை, அரசாங்கம் கடந்த காலங்களில் தாலுகாவை பிரிக்கும் காலத்திலேயே மக்களு டைய கருத்தை அறிந்து செயல் படுத்தி இருக்க வேண்டும். மக்கள் தெரிவித்த கருத்தைக் கேட்காமல்  நீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு பின்பு தற்போது அரசாங்க உத்த ரவு போட்டிருப்பதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.