கோவை, ஆக.4- களரி வீரர்களை கேரள அரசு கௌரவிப்பதைப்போல, சிலம்பம் வீரர்களை தமிழக அரசு கௌரவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் ஞாயிறன்று மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடை பெற்றது. இதில், 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அப்போது, இந்நிகழ்ச்சியில் சுப்ரீம் கிராண்ட் மாஸ்டர் அரு ணாச்சலம் மணி என்பவர் பேசுகையில், கடந்த 60 ஆண்டுக ளாக சிலம்பம் வீரர்கள் மாநில அளவில் எந்தவித கௌரவமும் பெறாத நிலை உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் களரி வீரர்களுக்கு அம்மாநில அரசு பல்வேறு விருதுகள் வழங்கி ஊக்குவிப்பதாகவும், இதன் காரணமாக பத்மஸ்ரீ போன்ற தேசிய அளவிலான விருதுகள் கிடைக்கிறது. தமிழக அரசும், கேரளாவைப் போல சிலம்பம் வீரர்களை கௌரவித்து ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் சிலம்பம் கலை மேலும் வளர்ச்சி அடைந்து, தமிழகத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துச் செல்ல முடியும், என்றார்.