districts

கொள்ளிடத்தை தலைமையிடமாக கொண்டு தனி வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநாடு கோரிக்கை

சீர்காழி, பிப்.28 - மயிலாடுதுறை மாவட் டம் கொள்ளிடத்தில் தமிழ் நாடு ஊரக வளர்ச்சித் துறை  அலுவலர்கள் சங்க கொள்ளி டம் வட்டார கிளை 5 ஆவது  மாநாடு ஞாயிறன்று நடை பெற்றது. வட்டார தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வட்டார துணைத் தலைவர் நாகராஜன் வர வேற்றார்.  வட்டார செயலாளர் திரு ஞானம் வேலை அறிக்கை யையும் வட்டார பொருளா ளர் ரமேஷ் நிதிநிலை அறிக் கையையும் வாசித்தனர்.  மாவட்ட தலைவர் நல்ல முத்து, மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட  துணை தலைவர் சிங்கார வேலு, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் அதி காரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநி லத் தலைவரின் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து  செய்து பணி ஓய்வில் செல்வ தற்கு அரசு ஆவன செய்ய வேண்டும். கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளை உள்ளடக்கிய கொள்ளிடம் வட்டாரத்தை தலைமையிடமாக கொண்டு தனி வட்டாட்சியர் அலுவல கத்தை கொள்ளிடத்தில் அமைத்திட வேண்டும். கொள்ளிடம் ரயில்வே கேட்டை மூடும்போது வாகன  நெரிசலை தவிர்க்கும் வகை யில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். 26  ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சியில் பணிபுரிகிற ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்கிட வேண்டும். நல்லூர்  அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தை அரசு மருத்துவமனை யாக மாற்ற வேண்டும். ஊரக  வளர்ச்சித் துறையில் காலி யாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மதிப்பீட்டு அளவை ரூ.2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில  செயலாளர் சௌந்தர பாண்டியன் நன்றி கூறினார்.