சேலம், டிச.10- எரிபொருட்கள் விலை மற்றும் இன் சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண் டும், என வலியுறுத்தி சிஐடியு சாலை போக்குவரத்து சங்கத்தினர் செவ் வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பெட்ரோல், டீசல் விலை மற்றும் இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டம் என்ற பெயரால் மோட்டார் தொழிலை அழிக்கக்கூடாது.
மரண விபத்திற்கு 5 முதல் 10 ஆண்டுகள் சிறை என்ற கொடூர தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இயற்கை எரி வாயு (சிஎன்ஜி) நிலையங்களை அதிகப் படுத்தி, எரிபொருள் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். உயர்நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில், ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்ட ணத்தை தமிழக அரசு மாற்றியமைக்க வேண்டும்.
ஆன்லைன் அபராதத் திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஓலா, உபர் போன்ற நிறுவனங்களை கட்டுப்படுத்த அக்ரி கேட்டர் வழி முறையை உருவாக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சாலை போக்குவரத்து சங் கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், கண்ணம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சாலை போக்குவரத்து சங்க சேலம் மாவட்டச் செயலாளர் பி.முருகேசன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கட பதி, ஆட்டோ சங்க மாவட்டச் செயலா ளர் உதயகுமார், சிஐடியு நாமக்கல் மாவட்டத் தலைவர் அசோகன், செய லாளர் மூர்த்தி, சாலை போக்குவரத்து சங்க நாமக்கல் மாவட்டச் செயலாளர் சுரேஷ், உரிமைக்குரல் அமைப்பின் பொதுச்செயலாளர் வெங்கடேஷ், உரிமை கரங்கள் போக்குவரத்து சங்க செயலாளர் கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை மாவட்டம், போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழி லாளர் சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாவட்டச் செயலாளர் ஏ.எம்.ரபிக், சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் முத்துக்குமார், சிஐடியு நிர் வாகி கே.ரத்தினகுமார் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து இணை ஆணையரிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
ஈரோடு
ஈரோடு வட்டார போக்குவரத்து அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சிஐடியு சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தனாபல் தலைமை வகித் தார். உதவித் தலைவர் எஸ்.வெங்க டேசன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம், மாவட்டக்குழு உறுப்பினர் ப.மாரி முத்து, சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்க பொதுச்செயலாளர் பி.கன கராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில், மாவட்ட உதவித் தலைவர் நாச்சிமுத்து நன்றி கூறினார்.