districts

img

ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் இறுதி நாளில் தொழிலாளர்கள் உற்சாகமாக வாக்களிப்பு

சேலம், டிச.6- ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலின் இறுதிநாளான வெள்ளி யன்று, ரயில்வே தொழிலாளர்கள் உற் சாகமாக வாக்களித்தனர்.

ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் டிச.4 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. சிஐடியு ரயில்வே தொழிற்சங்க அமைப்பான தட்சின ரயில்வே எம்ளாயீஸ் யூனியன் (டிஆர் இயு) நட்சத்திரம் சின்னத்தில் போட்டி யிடுகிறது. சேலத்தில் ரயில்வே கோட்ட  மேலாளர் அலுவலகத்தில், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தேர் தல் நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட துணைக் கோட்ட மேலாளர் சிவ லிங்கம் தேர்தல் அதிகாரியாக நிய மிக்கப்பட்டுள்ளார். சேலம் ரயில்வே  கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், கிருஷ் ணகிரி, தருமபுரி, ஆத்தூர், சின்ன சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திண் டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 8,653 பேர் தேர்தலில் வாக்களித்தனர். மூன்று  நாட்கள் வாக்குப்பதிவு நடைபெற் றது. வாக்குப்பதிவின் இறுதிநாளான வெள்ளியன்று ரயில்வே தொழிலா ளர்கள் உற்சாகமாக வாக்களித்தனர். சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அலு வலக நுழைவுவாயிலில் அமைக்கப் பட்டிருந்த தேர்தல் பணிமனையில் சிஐ டியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன் தலைமையில், சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே. தியாகராஜன், டிஆர்இயு செயலாளர் அல்லிமுத்து, நிர்வாகிகள் குமரேசன், திருப்பதி, சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் பி.பன்னீர்செல்வம், கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் தேர்தல் பணியாற்றி னர். டிச.12 ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட உள்ளது.

கோவை

ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் டிஆர்இயு சங்கத்தின் வெற்றிக்காக மூன்று நாட்கள் ஐந்து குழுக்களாக டிஆர்இயு சங்க நிர்வாகி களுடன் இணைந்து தேர்தல் பணியாற் றிய சிஐடியு இணைப்பு சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு சிஐடியு கோவை மாவட்ட நிர்வாகி கள் நேரில் சென்று பாராட்டி வாழ்த்து களை தெரிவித்தனர். இதில், மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தலைவர் கே.மனோகரன், பொருளாளர் ஆர். வேலுசாமி, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.அஜய் குமார் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.