districts

img

குடிநீர் கேட்டு மறியல்

சேலம், டிச. 9- சேலம் மாநகரில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங் காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் வீரா ணம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

சேலம் மாநகராட்சி 10 ஆவது வார்டுக்கு உட்பட்ட கனவீரப் பன் கோயில் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. இந்த பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும்  குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக கூறப்படு கிறது. இதனால் குடிநீரை பணம் கொடுத்து வாங்குவதாக வும், அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் இன்றி கடும் சிர மத்திற்குள்ளவதாகவும், குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை  விரைந்து சரி செய்து சீரான முறையில் குடிநீர் விநி யோகிக்க வலியுறுத்தி பொன்னம்மாபேட்டையில் இருந்து  வீராணம் செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது  குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த அம்மா பேட்டை காவல்நிலைய போலீசார் மறியலில் ஈடு பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மாநக ராட்சி நிர்வாகம் மூலம் விரைந்து குடிநீர் கிடைக்க நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

நாமக்கல்

இதேபோன்று, கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடி நீர் வராததால் திங்களன்று மோகனூர் சாலை தோப்பூரில்  கங்கநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள் காலிக் குடங்க ளுடன் திடீர் சாலை மறியல் செய்தனர் .இதனால் மோக னூர் நாமக்கல் சாலையில் அரை மணி நேரம் போக்கு வரத்து தடைப்பட்டது. தகவல் அறிந்த வந்த  மோகனூர்  தாசில்தார் மணிகண்டன், மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக் டர் லட்சுமணதாஸ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இனி வரும் நாட்களில் தங்கு தடையின்றி சீராக குடிநீர் வரும்  என தெரிவித்த  பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது பர பரப்பு காணப்பட்டது.