சேலம், ஜூன் 13 - அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ரேசன் கடைகளில் வழங்க வேண்டும் என மாதர் சங்க மாநாடுகள் வலியுறுத்தி உள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மேட்டூர் கொளத்தூர் ஒன்றிய மாநாடு ஞாயிறன்று மேட்டூரில் நடை பெற்றது. இடைகமிட்டி தலைவர் சகுந்தலா தலைமையில் நடைபெற்ற மாநாட்டை சேலம் மாவட்ட துணைத்தலைவர் கே.ராஜாத்தி துவக்கி வைத்து உரை யாற்றினார். செயலாளர் எஸ்.எம்.தேவி வேலையறிக்கை முன்வைத்தார். மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரி சிறப்புரையாற்றினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். நிரந் தர கட்டிடம் உள்ள ரேசன் கடைகளுக்கு நிழற்கூரை அமைத் திட வேண்டும். அனைத்து அத்தியாவசிய பொருட்களை யும் ரேசன் கடைகளில் வழங்க வேண்டும். சட்டமன்ற, நாடா ளுமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இதைத்தொடர்ந்து மேட்டூர் கொளத்தூர் ஒன்றிய மாதர் சங்கத்தின் தலைவராக கே.சகுந்தலா, செயலாளரா எஸ்.எம்.தேவி, பொருளாளராக மகாலட்சுமி உட்பட 8 பேர் கொண்ட புதிய ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண் டனர்.
கோவை சிங்கை, பீளமேடு மாநாடு
இதேபோன்று கோவை சிங்கை, பீளமேடு நகர மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. இளங்கோ நகரில் உள்ள ஜோதிபாசு இல்லத்தில் நடைபெற்ற இம்மா நாட்டிற்கு சிங்கை நகர தலைவர் எஸ்.சரஸ்வதி தலைமை வகித்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாதர் சங்க மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி உரையாற்றினார். வேலையறிக்கையை நகரச் செயலாளர் சி.ஜோதிமணி முன்வைத்தார். இதைத்தொடர்ந்து மாநாட்டில் சிங்கை, பீளமேடு என இரண்டு நகரக்குழுக்களாக பிரிக்கப்பட்டது. இதில், பீள மேடு நகர தலைவராக அமுதா, செயலாளராக ராஜி, பொரு ளாளராக ரீனா உள்ளிட்ட 11 பேர் கொண்ட நகரக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிங்கை நகர தலைவராக காஞ்சனா, செயலாராக ரம்யா, பொருளாளராக ஷிபா உள்ளிட்ட 11 பேர் கொண்ட நகரக்குழு தேர்வு செய்யப்பட்டது.