districts

img

சிதிலமடைந்த குழித்துறை அரண்மனை விரைவில் சீரமைக்கப்படும்

அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

குழித்துறை, ஜூலை 14- கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் உள்ள சிதிலம டைந்த அரண்மனை சீரமைக்கப் படும் என தமிழக இந்து அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழக இந்து அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக குமரி மாவட்டத்தில் உள்ள திக்குறிச்சி, குழித்துறை மகாதேவர் கோயில் கள், குழித்துறையில்  மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்ட சிதிலமடைந்த அரண்மனை உள்ளிட்டவைகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, திக்குறிச்சி மகாதேவர் கோ யிலில் தாமிரபரணி ஆற்றங்கரை யோர சுற்றுச் சுவரை சீரமைக்க நடைவடிக்கை எடுக்கப்படும், ஆண்டுதோறும் மகா சிவ ராத்திரிக்கு பொது விடுமுறை அளிப்பது குறித்து தமிழக முதல்வ ருடன் ஆலோசித்து முடிவெ டுக்கப்படும்,  குழித்துறையில் உள்ள சிதிலமடைந்த அரண்மனை விரைவில் சீரமைக்கப்படும், குழித்துறையில் பூட்டிக்கிடக்கும் தேவசம் உயர்நிலைப் பள்ளியை திறந்து செயல்படுத்துவது குறித்து இப்பகுதி மக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும். சட்டத் துக்கு உள்பட்டு குமரி மாவட்ட கோயில்களுக்கு யானைகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது அமைச்சருடன் கன்னி யாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த்,விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். விஜயதரணி மற்றும் அற நிலையத்துறை அதிகாரிகள் உட னிருந்தனர்.