districts

img

வாடகைக் கட்டிடங்களுக்கு ஜிஎஸ்டி: வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், டிச.11- வாடகைக் கட்டிடங்களுக்கு விதிக் கப்பட்ட ஜிஎஸ்டியை திரும்பப்பெற வேண்டும், என வலியுறுத்தி வணிகர்  சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். வணிக பயன்பாடுகளுக்கான வாடகைக் கடைகளின் மீது ஒன்றிய அரசு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதித்துள் ளது. இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சேலம் மாநகராட்சி  வணிக நிறுவனங்களுக்கு சொத்து வரி  பல மடங்கு உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும்.

மாநில அரசு கொண்டு வந்துள்ள ஆண்டுதோறும் 6 சதவிகி தம் கூடுதல் சொத்து வரி விதிப்பை ரத்து  செய்ய வேண்டும். வணிக உரிமை கட்ட ணம் உயர்வு மற்றும் தொழில்வரி உயர் வினை ரத்து செய்ய வேண்டும். மின்  கட்டண உயர்வை ரத்து செய்ய வேண் டும். சேலம் மாநகராட்சி அதிகாரிகள் வணிகர்களை மிரட்டிவரி வசூல்  செய்து வருகின்றனர். உடனடியாக இந்த நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும், என வலியுறுத்தி சேலம் மாவட்ட அனைத்து வியாபாரி கள் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ்.கே.பெரிய சாமி உட்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.

இதில் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர்கள் எஸ்.பெரிய சாமி, ஆர்.செல்வராஜ், கே.சுப்பிரமணி யம், எஸ்.சங்கர், இணைச்செயலாளர் பத்ரி நாராயணன், மாவட்டச் செயலா ளர் பொன்.வீரக்குமார் உட்பட திரளான  வணிகர்கள் கலந்து கொண்டனர். கோவை இதைபோன்று கோவை தெற்கு வட் டாட்சியர் அலுவலகம் அருகே, வணிகர்  சங்கங்களின் பேரமைப்பு சார்பில்  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு, அச்சங்க மாவட்டத் தலைவர் ஜி. இருதயராஜா தலைமை வகித்தார்.

பேரமைப்பின் மண்டலத் தலைவர்  டி.ஆர்.சந்திரசேகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், வணிகர்கள்  சங்க நிர்வாகி பலர் கலந்து கொண்ட னர். இதேபோன்று, பொள்ளாச்சி, தரும புரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான வியா பாரிகள் கலந்து கொண்டனர்.

கடையடைப்பு: ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

ஒன்றிய, மாநில அரசுகளின் வரி விதிப்பை கண்டித்து, புதனன்று சேலம்  மாநகரில் 50 ஆயிரம் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத் தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடை பெற்ற கடையடைப்பு இயக்கத்திற்கு, 87 சங்கங்கள் ஆதரவளித்துள்ளன. இதனால் 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் முடங்கியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அரசு எங்களின் கோரிக்கையை ஏற்காத பட்சத் தில் அடுத்த கட்ட போராட்டங்கள் அடுத்தடுத்து நடத்தப்படும், என வியாபாரி கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.