districts

img

பழைய பென்சன் திட்டம் வேண்டும்! ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

சேலம், டிச.17- ஓய்வூதியர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில், ஓய்வூதியர் தின விழா செவ்வாயன்று கொண்டாடப் பட்டது. நாடு முழுவதும் ஓய்வூதியர்  தினம் டிச.14 ஆம் தேதி கொண்டா டப்பட்டது. அதன்ஒருபகுதியாக தமிழ் நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின்  கூட்டமைப்பு சார்பில், சேலம் நான்கு  ரோடு அருகே உள்ள தனியார் மண்ட பத்தில் ஓய்வூதியர் தின விழா சனி யன்று கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்விற்கு கூட்டமைப்பின் தலை வர் எ.நடராஜன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில், புதிய பென்சன் திட் டத்தை ரத்து செய்து, பழைய பென் சன் திட்டத்தை அமல்படுத்த வேண் டும். போக்குவரத்து தொழிலாளர் களுக்கு வழங்கப்படாமல் உள்ள 106 மாத அகவிலைப்படியை உடனடி யாக வழங்க வேண்டும்.

70 வயதை தாண்டிய ஓய்வூதியர்களுக்கு 10  சதவிகிதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி, சத் துணவு உள்ளிட்ட ஓய்வூதியர்க ளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7800 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இக்கோரிக்கைகளை வலியு றுத்தி டிச.23 ஆம் தேதியன்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபடுவது என முடிவு செய் யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஓய்வூதியர் சங் கங்களின் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் சி.ராஜ்குமார், அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், ஊரக வளர்ச்சி ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் ஆர்.சுப்பிரமணியம், மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் சங் கங்களின் ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் நேதாஜி உட்பட பலர்  கலந்து கொண்டனர். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செய லாளர் எம்.நாதன் நிறைவுரையாற் றினார்.