சேலம், டிச.7- ஏற்காட்டிலிருந்து மதுரை மற்றும் சென்னைக்கு பேருந்து சேவையை அமைச்சர் ராஜேந்திரன் சனியன்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் 17 புதிய பிஎஸ்-6 வகை பேருந்து சேவைகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சனியன்று துவக்கி வைத்தார்.
இதன் பின் அவர் பேசுகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டத்திற்கு கடந்த 6 மாதங்களில் மட்டும் 234 புதிய பிஎஸ்-6 வகை பேருந்துகளும், 253 முழுவதும் புதுப் பிக்கப்பட்ட பேருந்து சேவைகளும் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. குறிப் பாக, சேலம் மாவட்டத்திற்கு கடந்த 6 மாதங்களில் மட்டும் 128 புதிய பிஎஸ்-6 வகை பேருந்துகளும், 139 முழுவதும் புதுப்பிக்கப்பட்ட பேருந்து சேவைக ளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், சனியன்று சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பெங்களுருவிற்கு 13 பேருந்துக ளும், சேலத்திலிருந்து சென்னைக்கு 2 பேருந்துகளும், சுற்றுலா வளர்ச் சிக்காக ஏற்காட்டிலிருந்து சென்னை மற்றும் மதுரைக்கு புதிய வழித்தடத் தில் தலா 1 புதிய பேருந்துகள் என 17 புதிய பிஎஸ்-6 வகை பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சி யர் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சேலம் மேற்கு சட்ட மன்ற உறுப்பினர் ரா.அருள், மாநக ராட்சி துணை மேயர் மா.சாரதாதேவி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ், பொது மேலாளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.