சேலம், டிச. 9- இந்தியா பாகிஸ்தான் போரில் மரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பங்களுக்கு வழங்கிய நிலத்தை, அரசு திருப்பி கேட்பதை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள், திங்களன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் சாமி நாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தனது குடும்பத்தினருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நுழைவாயிலில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடு பட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தனது சித்தப்பா சித் தன் என்பவர் ராணுவ சிப்பாயாக கடந்த 1965 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போரில் மரணம் அடைந்தார். இதற்காக கருணை அடிப்படையில் அப் போதைய சேலம் மாவட்ட ஆட்சியர் 1969 ஆம் ஆண்டு ஓம லூர் வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் சாமி நாயக்கன் பட்டியில் 2.92 சென்ட் நிலத்தை வழங்கினர். 53 ஆண்டுக ளுக்கு மேலாக அனுபவம் செய்து வருகிறோம். இதுவரை அந்த நிலத்திற்கு பட்டா கேட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தற்போது வழங்கப்பட்ட அந்த நிலத்தை திருப்பி வழங்குமாறு அரசு நிர்வாகம் கூறுகிறது. தமிழ்நாடு முதல மைச்சர் பிரச்சனையில் தலையீடு செய்து உரிய தீர்வு காண வேண்டும் என்றார்.
இராணுவ வீரர் குடும்பம் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.