சேலம், டிச.10- அநியாய சொத்து வரி மற்றும் மின் கட்ட ணம் உயர்வை கைவிட வேண்டும், என வலியு றுத்தி சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரில் பிரதான தொழில்களில் ஒன்றாக உள்ள விசைத்தறி தொழிலில், எண் ணற்ற தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்ற னர்.
ஒன்றிய அரசின் நவதாரளமய கொள்கை காரணமாக நூல்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி என விசைத்தறித் தொழில் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மின் கட்டண உயர்வால் விசைத்தறி உள் ளிட்ட சிறு, குறு தொழில்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. மேலும், வீடுகளில் செயல்படும் கூடங்களுக்கும், கூடுதல் மின் கட்டண உயர்வு, அபராதம் என தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, வணிகப் பயன்பாடு என அநி யாய சொத்துவரி, மின்கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சங்கத் தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
சேலம் கோட்டை மைதானத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விசைத்தறித் தொழிலாளர் சங்க மாவட்ட உதவித்தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமை வகித்தார். இதில் பொதுத்தொழிலாளர் சங்க செயலா ளர் பொன்.ரமணி, ஜவுளி சங்க துணைத்தலை வர் கே.பச்சமுத்து, சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் வி.இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.