districts

img

பராமரிப்பு பணி: பாலாறுப் பாலத்தில் வாகனங்களுக்கு தடை

ராணிப்பேட்டை, ஜூலை 17 -
 ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு - ராணிப்பேட்டை இடையிலான  பாலாற்றில் கட்டப்பட்ட புதிய பாலம் பராமரிப்பு பணி  நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜூலை 17) முதல் ஒரு மாத காலம் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்ட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வேலூரிலிருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களும் விசாரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள   தில்லை திருமண மண்டபம் இடதுபுறமாக வளைந்து தெங்கால் வழியாக வாலாஜா டோல்கேட் இணைப்பு சாலையில் செல்ல வேண்டும் எனவும், வேலூரில் இருந்து  ஆற்காடு வழியாக சென்னை செல்லும் பேருந்துகள் விசாரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள எ2பி உணவகம் எதிரே உள்ள இணைப்பு சாலை வழியாக ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் இணைந்து  செல்ல வேண்டும். மேலும் சென்னையில் இருந்து வாலாஜா வழியாக வேலூர் செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் தெங்கால் வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலையில் இணைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.