ராணிப்பேட்டை, ஜூலை 18 - தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவில் பேரிடர் காலங்களில் கட்டிட இடி பாடுகளில் சிக்கிய நபர்கள் உயிருடன் உடனடியாக மீட்க உதவும் வகையில் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவில் இருந்து மோப்ப நாய் பயிற்சி அளிக்கப்படுகிறது
அதன் ஒரு பகுதியாக மனிதர்களிடம் நட்பு ரீதியான பழகும் விதத்தில் நாய்களுக்கும் மனிதர்களுக் கும் இடையே பயத்தை போக்கும் விதத்தில் ராணிப் பேட்டை மாவட்டம் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் பொதுமக்களி டம் எவ்வாறு எளிதாக பழகும் பயிற்சி நாய்களுக்கு அளிக்கப்பட்டது.
அதில் படை வீரர் பிரிவின் கால்நடை மருத்துவர் சைலேந்திர சிங் மற்றும் மோப்ப நாய்கள் பயிற்சி யாளர்கள் ஈஸ்வர ராவ், முத்து குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.