முறைசாரா தொழிலாளர் நல வாரிய குளறுபடிகளை சீர் செய்திட வலியுறுத்தி சிஐடியு சார்பில் மாவட்ட தலைவர் ஆர். வெங்கடேசன் தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில செயலாளர் ஆ. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் ஆ.தவராஜ், பொருளாளர் என்.ரமேஷ், சி. துரைராஜ்(பொதுத்தொழிலாளர்சங்கம்), த.ஞானமுருகன்(கட்டுமானசங்கம்), டி. சந்திரன், பி.ரகுபதி(விதொச), ஆர்.மணிகண்டன் (டேனரி சங்கம்), பி. கோதண்டபாணி(உள்ளாட்சிசங்கம்), பி.மணி,கே.கே.வி.பாபு (ஆட்டோ சங்கம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.