ராணிப்பேட்டை, டிச. 8 – தேர்தல் கால வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் எஸ். ஜோசப் கென்னடி தலைமையில் ஞாயிறன்று (டிச.8) ராணிப்பேட்டை மாவட்ட 2வது மாநாடு வாலாஜாபேட்டையில் நடைபெற்றது.
இதில் மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பாரி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் எம். பர்சிலா வான சாஸ்திரி அறிக்கை முன் வைத்தார். ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் மோகன், சுந்தரேசன், முரளி தாஸ், ஆர். சேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அரசு ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாஸ்கர் நிறைவு செய்து பேசினார். இறுதியாக மாவட்ட பொருளாளர் எம். ஆனந்தபாபு நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட குழு தேர்வு
மாவட்ட தலைவராக எஸ். ஜோசப் கென்னடி, செயலாளராக எம். பர்சிலா வான சாஸ்திரி, பொருளாளராக எம். ஆனந்தபாபு ஆகியோர் குழு தேர்வு செய்யப்பட்டனர்.