districts

img

முன்னுரிமையை பாதுகாக்க டிட்டோ-ஜாக் மறியல்

ராணிப்பேட்டை, ஜூலை 4-  பணி மாறுதல் தொடர்பான அரசாணை  243ஐ ரத்து செய்யக் கோரி மாநிலம் முழுவதும் புதனன்று (ஜூலை 3) டிட்டோ-ஜாக் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிட்டோ-ஜாக் மாநில உயர்மட்ட குழு  உறுப்பினர் சி.சேகர் தலை மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல்  போரில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி மாவட்டச் செயலாளர் செ.சரவணன், டிஏஏகே மாவட்டச் செயலாளர் பி. பாலமுருகன், டிஎன்எஸ் டிஎப் மாவட்டச் செயலாளர் ஆ. வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.    விவசாய சங்க மாவட்ட செயலாளர் எல்.சி. மணி,  பொருளாளர் சி. ராதா கிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் கைதான ஆசிரியர்களை நேரில் சென்று போராட்டத்தை வாழ்த்தி பேசினர்.