districts

img

கார்களை ஏற்றிச் சென்ற லாரியில் தீ

ராணிப்பேட்டை, ஜுன் 26 -  உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சரக்கு பெட்டக லாரி ஓட்டுநர் துனு யாதவ் (40)   மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில்  இருந்து சென்னை வேலப்பன் சாவடிக்கு அசோக் லேலண்ட் கண்டெய்னர் லாரியில் 8 மகேந்திரா புதிய கார்களை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார்.   

 பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அமனந்தாங்கல் நாமக்கல் பெட்ரோல் பங்க் அருகில் புதனன்று (ஜூன். 26) சென்று கொண்டிருந்த போது  திடீரென வாகனத்தில் புகை வந்ததால் ஓட்டுநர் வண்டியை விட்டு கீழே இறங்கி னார்.  லாரி என்ஜினில் தீ மளமள என பரவியது.  தகவல் அறிந்து ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.