இராமேஸ்வரம், ஆக. 21 - இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்ட தமிழக நாட்டுப் படகு மீன வர்கள் 35 பேருக்கு, செப்டம்பர் 4 வரை யிலும் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப் பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டனர்.
இராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்த மான நான்கு நாட்டுப் படகுகளை பறி முதல் செய்ததுடன், அதிலிருந்த 35 மீன வர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 8 அன்று கைது செய்தனர். 35 மீனவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, புத்தளத்தில் உள்ள வாரியாபொல சிறையில் அடைத்தனர்.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகு களையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்ப னில் நாட்டுப் படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டிருந்தனர்.
மீனவர்களுடன் தமிழக அரசு தரப்பில் மீன்வளத் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டத்தை திரும்பப் பெற்று கட லுக்குச் சென்றனர்.
இந்நிலையில், பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 35 பேரும் புத்த ளம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி விமனே விமலரத்னா மீனவர்கள் 35 பேரு க்கும், செப்டம்பர் 4-ஆம் தேதி வரை இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். தொட ர்ந்து மீனவர்கள் வாரியாபொல சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.