districts

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இராமேஸ்வரம், அக். 14 - கடந்த சனிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். ஞாயிறு அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்துமீன்பிடிப்பதாகக் கூறி, உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். பின்னர், 5-க்கும் மேற்பட்ட மீனவர்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்தினர். இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் அச்சமடைந்த விசைப்படகு மீனவர்கள், உடனடியாக கரைக்குத் திரும்பினர்.