districts

கடல் அட்டை பறிமுதல்: இருவர் கைது

இராமநாதபுரம், ஏப்.21- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன், முகமது நசுருதீன் என்ற இரட்டையர் அப்பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டி தங்களை சமூக சேவகர் என  காட்டிக்கொண்டு பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  

குறிப்பாக இவர்கள் இருவர் மீதும் கஞ்சா வழக்கு ஒன்று நிலு வையில் உள்ள நிலையில், அதற் கான பிடிவாரண்ட் வழங்குவதற்காக கீழக்கரை சார்பு ஆய்வாளர் கோ ட்டைச்சாமி இரட்டையர் வீட்டிற்கு சென்றபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட ரூ.20லட்சம் மதிப்பி லான 700 கிலோ கடல் அட்டை மூட்டை மூட்டையாக இருப்பதை கண்டார்.

 எனவே, இதுகுறித்து கீழக் கரை சரக வனத்துறை அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் வீட்டின் பின்புறமாக மூட்டை மூட்டையாக பதுக்கி வைக் கப்பட்டிருந்த ரூ.20 லட் சம் மதிப்பி லான சுமார் 700 கிலோ கடல் அட் டையை பறிமுதல் செய்து இருவரி டமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.