கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கபே உண வகத்தில் மார்ச் 1 அன்று அடுத்த டுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித் தன. இந்த சம்பவத்தில் 10 பேர் படுகாய மடைந்தனர். இது தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளி தொடர்பான சிசிடிவி ஆதா ரம் வெளியான பின்பும், குற்றவாளியை கைது செய்ய முடியாமல் என்ஐஏ திணறி வருகிறது. குண்டுவெடிப்பு குற்றவாளி தொடர்பாக தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் வரை சன்மானம் அளிப்பதாக சமீபத்தில் என்ஐஏ அறிவித்துள்ளது.
இந்நிலையில், ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு தொடர்பாக பெல்லாரி பகுதியில் சபீர் என்பவர் கைது செய் யப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் உண் மையில் இவர்தான் தாங்கள் தேடிவந்த நபரா என்பதை உறுதி செய்வதற்காக சபீரிடம் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.