districts

பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 3-ஆவது நாளாக வேலை நிறுத்தம்

இராமேஸ்வரம், ஜூலை 4 - இலங்கை கடற்படை யினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்ப னில் வியாழனன்று (ஜூலை  4) மூன்றாவது நாளாக நாட்  டுப் படகு மீனவர்கள் வேலை  நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

 பாம்பன் மீன்பிடி துறை முகத்திலிருந்து ஜூன் 30 அன்று கடலுக்குச் சென்ற இருதயராஜ், ஸ்டீபன், ஜார்ஜ் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று நாட்டுப் படகுகள், நம்புதாளை கடற்  பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற ஒரு நாட்டுப்படகு என  மொத்தம் நான்கு நாட்டுப் பட குகளை கைப்பற்றிய இலங் கைக் கடற்படையினர் அதி லிருந்த 25 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறைப்  பிடிக்கப்பட்ட மீனவர்களை யும், கைப்பற்றப்பட்ட படகு களையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி பாம்ப னில் நாட்டுப் படகு மீனவர்  கள் வேலை நிறுத்தப் போரா ட்டத்தை கடந்த ஜூலை 2-ஆம் தேதி தொடங்கினர்.

இந்நிலையில், அவர்களின் போராட்டம் வியாழனன்று மூன்றாவது நாளாக தொட ர்ந்தது. இதனால் பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் 200-க்கும் மேற்பட்ட நாட்  டுப் படகுகள் கடலுக்குச்  செல்லாமல் கரையோரங்க ளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்  ளன. வெள்ளிக்கிழமை யன்  றும் (ஜூலை 5) வேலை நிறுத்தப் போராட்டம் தொட ரும் என்றும் அத்துடன் பாம்  பன் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்றும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.