districts

img

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள்: மோடி அரசு அலட்சியம்

இராமநாதபுரம், பிப். 24 - கடந்த பிப்ரவரி 4 அன்று இராமேஸ் வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 23 மீன வர்கள், இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்டனர். இதில் 4 பேருக்கு 6 மாதம் முதல் ஓராண்டு  வரை சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. தமிழக மீனவர்களின் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 படகுகளை யும் இலங்கை அரசுடைமையாக்கி யுள்ளது. இது தமிழக மீனவர்களி டையே கடும் கொந்தளிப்பை ஏற் படுத்தியுள்ளது. 

இதனால், மீனவர்களையும், படகுகளையும் மீட்டுத்தரக் கோரி, இராமேஸ்வரம் மீனவர்கள் சனிக்கிழ மையன்று காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கி யுள்ளனர். கச்சத்தீவில் நடைபெற்று வரும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையும் தமிழக மீனவர்கள் புறக்கணித்துள்ளனர். 

ஒன்றிய அரசு தலையிட்டு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற் படுத்தித் தர வேண்டும் என்பதே மீன வர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதனிடையே, இராமேஸ்வரம் மீனவர்களை, கச்சத்தீவுக்கு வருமா றும், அங்கு பேச்சுவார்த்தி நடத்தி தீர்வு காணலாம் என்றும் இலங்கை மீனவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், இந்த அழைப்பை இராமேஸ் வரம் மீனவர்கள் ஏற்கவில்லை.