இராமேஸ்வரம், பிப்.25- தமிழக மீனவர்களை தொட ர்ந்து கைது செய்யும் இலங்கைக் கடற்படையைக் கண்டித்தும், ஒன்றிய அரசு தலையிட்டு சிறை யில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்.
படகு களையும் திரும்ப ஒப்படைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். இந்த நிலையில் ஞாயிறன்று, இராமநாதபுரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் சந்தித்துப் பேசினார்,
அப்போது அவர், “இலங்கை சிறையில் உள்ள மீன வர்களை விடுவிக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை திரும்பப் பெற்றனர் மீனவர்கள்.