districts

இராமேஸ்வரம் அருகே பேருந்து மீது கார் மோதி 5 பேர் பலி; 3 பேர் படுகாயம்

இராமேஸ்வரம், செப்.8- இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது கார் ஒன்று மோதியதில், 2 பெண் குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவரது 14 நாள்  குழந்தைக்கு உடல் நலம் குன்றிய தால் இராமநாதபுரத்தில் உள்ள  மருத்துவமனை ஒன்றில் அனுமதித்திரு ந்தார். குழந்தைக்கு துணையாக அவரது மாமியார் அங்காளஈஸ்வரி (70) இருந்துள்ளார்.

சனிக்கிழமை மாலை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு சிகிச்சை முடிந்து வாடகை கார் ஒன்றில் ராஜேஷ், அவரது மனைவி பாண்டிச்செல்வி (28), மகள்கள் தர்ஷனா ராணி (8), பிரணவிகா (5), மாம னார் செந்தில்மனோகரன், 14 நாள்  குழந்தை மற்றும் மாமியார் அங்காள ஈஸ்வரி ஆகியோருடன் தங்கச்சிமடம் திரும்பிக் கொண்டிருந்தார். இவர்களது கார் சனிக்கிழமை நள்ளி ரவு 12.30 மணியளவில் அக்காள்மடம் அருகே வந்துகொண்டிருந்தபோது, இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ராஜேஷ், அவரது 2 பெண் குழந்தைகள் தர்ஷனா ராணி மற்றும் பிரணவிகா, செந்தில் மனோகரன், அங்காள ஈஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் கார் ஓட்டுநர் சபரி பிரிட்டோ  (35), பாண்டிசெல்வி மற்றும் அவ ருக்குப் பிறந்த 14 நாள்குழந்தை ஆண்  குழந்தை ஆகியோர் பலத்த காய மடைந்தனர். அவர்கள் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து உச்சிப்புளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பேருந்தில் பயணம்  செய்த பயணிக்கு தமக்கு வாந்தி வருவ தாகக் கூறியுள்ளார். இதையடுத்து  ஓட்டுநர் பேருந்தை நெடுஞ்சாலை யோரத்தில் நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் வந்த கார் பேருந்தின் மீது மோதியதில் 5 பேர் பலியானது தெரியவந்துள்ளது.