districts

img

ராமேஸ்வரம்: சாலை விபத்தில் 4 பேர் பலி  

ராமேஸ்வரம் அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.  

ராமநாதபுரம் அடுத்த மரைக்காயர்பட்டிணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பெட்ரோல் பங்கிற்கு வேலைக்கு செல்வதற்காக இருச்சக்கர வாகனத்தில் மண்டபம் மறவர் தெருவை சேர்ந்த  ஜெகன் (42), ஜெகதீஷ் (22)  மற்றும் மகேஷ் (40)  ஆகிய மூவரும் மரைக்காயர்பட்டிணம் அருகே சென்று வந்துகொண்டிருந்தனர். எதிர்திசையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனம் செய்ய  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அதிவேகமாக காரில் வந்துள்ளனர்.  

இந்நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இருசக்கரம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ஓய்வு பெற்ற காவல்துறை சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.    

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த 3 பேரை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  

இதையடுத்து காரின் ஓட்டுநரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.