districts

img

தமிழக மீனவர்கள் 32 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்  கூறி தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களை இரு வேறு இடங்களில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
 
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்வது தொடர்கதையாக உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தர்.  எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தனர். அதேபோல மன்னார் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 7 மீனவர்கள் 7 பேரை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்தனர். பின்னர் அவர்களின் 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதான மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் மீனவர்களை மன்னார், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படை ஒப்படைக்கயுள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகு, 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மேலும் 32 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.