districts

இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் அபராதம்!

சென்னை, டிச. 19 - இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வ ரத்தில் இருந்து கடந்த டிசம்பர் 5 அன்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீன வர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதில், இராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்டோ, பேட்ரிக் நாதன்  ஆகிய 2 பேருக்கு சொந்தமான விசைப்படகு களில் ரிபாக்சன், ராஜபிரபு, அரவிந்த் பாண்டி, ராபின்ஷன், முனீஸ்வரன், பிரசாந்த், ஆரோக்கியம், பெட்க் நாதன், யோபு, ஜான் எமர்சன், பரலோக மெக்டன் வினித், அருள் பிரின்ஸ்டன், அந்தோணி லிப்சன், நிசாம் ஆகிய 14 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.

இவர்கள் 14 பேரும் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை  தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி  சிறைப்பிடித்துச் சென்றனர். 2 படகுகளை யும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரையும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதத்துடன் விடு தலை செய்து இலங்கை  மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தினால் மீனவர்கள் உடனே விடு தலை செய்யப்படுவார்கள் என்றும் இல்லை யெனில் 6 மாத சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.