இராமநாதபுரம், ஜூலை 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தால் பரமக்குடியில் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக் குடி வைகையாற்றுக்குள் வசிக்கும் 13 பழங்குடியின குடும்பத்தினருக்கும் லீலாவதி நகரில் வீட்டுமனையற்ற 15 குடும்பத்திற்கும் என மொத்தம் 28 குடும்பங்களுக்கு பரமக்குடி வட்டாட்சி யர் சாந்தியின் முன்முயற்சியில் பரமக் குடி சார் ஆட்சியர், அபிலாஷா கௌவுர், ஜூலை 27 சனிக்கிழமையன்று பரமக் குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் வேந்தோனி குரூப் புல எண்கள் 316/4A, 318/6, 319/1 ஆகிய வற்றில் தலா 3 சென்ட் வீதம் இலவச வீட்டுமனை பட்டா (இணைய பட்டா) வழங்கினார்.
இந்நிகழ்வில் பரமக்குடி சார் ஆட்சி யர் நேர்முக உதவியாளர் பெ.சேகர் மற்றும் தலைமை எழுத்தர் முத்துரா மன், வருவாய் ஆய்வாளர் வேம்புரா ஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஸ் குமார், மணிகண்டன் மற்றும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செய லாளர் தி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வைகையாற்றில் கடந்த 2018 இல் 23 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இடம் நீர்ப்பிடிப்பு பகுதியாக இருப்பதால் இன்னும் ஒருவார காலத்தில் அவர்க ளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங் கப்படும் என சார் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் தெரிவித்தனர். பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கிய சார் ஆட்சி யர் , வட்டாட்சியர், அதிகாரிகள் மற்றும் தொடர்ந்து போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பழங்குடி யின பயனாளிகள் அனைவரும் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தனர்.