districts

img

மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

இராமநாதபுரம், டிச.8- எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேரை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் 2 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் வடக்கு மீன்பிடித் துறைமுக மீனவர்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 2 விசைப்படகுகளுடன் கைதான மீனவர்கள், காங்கேசன் துறைமுக முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு, தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.