இராமநாதபுரம், டிச.9- இராமநாதபுரம் மாவட்டம் இரா மேஸ்வரம் வட்டம் சேராங்கோட்டை கிராம மக்கள் தனுஷ்கோடி ஆற்றில் மீன் பிடிப்பதில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மற்றும் நிர்வாகம் குளறுபடிகள் செய்துள்ளது. குறிப்பாக தனி நபர் ஒருவருக்கு உள் குத்தகை விட்டதில் உதவி இயக்குநரும் இணைந்து முறைகேடு செய்துள்ளார்.
இதுகுறித்து முறையான விசாரணை கோரி தொடர்ச்சியாக போராட்ட அறிவிப்பு செய்யப் பட்டது. இந்நிலையில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை நிர்வாகங்கள் பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு மேற் கொண்ட நடவடிக்கைகளில் மீன்வளத்துறை யின் ஒத்துழைப்பு இன்மையால் தொடர்ந்து தள்ளி போனது. இராமேஸ்வரம் வட்டாட்சியர் நிர்வாகம் இந்தப் பிரச்சனையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையொட்டி மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பாக இராம நாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்ச னைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தர விட்டு இருந்தது.
அந்த உத்தரவை நிறைவேற்ற வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் நிர்வா கங்கள் உரிய முன் முயற்சிகள் எடுத்தும் மீண்டும் மீன்வளத்துறை நிர்வாகத்தின் ஒத்து ழைப்பு இன்மையால் பேச்சுவார்த்தை மீண்டும் தள்ளிப்போனது. இதையொட்டி மீன்வளத்துறை உதவி இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் நிர்வாகங்கள் மீது மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் முறையான நடவ டிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என வலியு றுத்தி திங்களன்று ஏற்கனவே இருமுறை அரசு நிர்வாகங்களின் வேண்டுகோளை ஏற்று ஒத்திவைத்திருந்த இராமேஸ்வரம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் கஞ்சி தொட்டி திறந்து காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டது.
இந்நிலையில், இராமேஸ்வரம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சி யர் ராஜ் மனோகரன் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் அரசு தரப்பில் இராமேஸ்வரம் வட்டாட்சியர் செல்லப்பா, மீன்வளத்துறை துணை இயக்கு நர் பிரபாவதி, உதவி இயக்குநர் அப்துல்கா தர், ஜெய்லாணி, கிராம நிர்வாக அலுவ லர் ரொட்ரிகோ, கிராம மக்கள் தரப்பில் கடல் தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் என்.பி.செந்தில், கிராம தலைவர் எம்.நம்புராஜன், கே.முனிய சாமி, நாகராஜ், மீனவ மகளிர் எஸ்.மகேஷ், ராமசேதுலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் மீனவர் களின் கோரிக்கைகள் நிறைவேற்ற தவ றும்பட்சத்தில் கிராம மக்கள் எந்தவித முன்ன றிவிப்பும் இன்றி ஆற்றில் இறங்கி மீன் பிடிப்பது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிராமத்தின் அனைத்து மக்களுக்கும் ஆற்றில் மீன் பிடிப்ப தற்கான உரிமம் வழங்குவது சம்பந்தமாக இரண்டு நாட்களில் உரிய முடிவு அறிவிக்கப் படும். இதர கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.