இராமநாதபுரம், செப். 20 - இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமையன்று (செப்.20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும், கைது செய்து சிறையில் அடைப் பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் அதி கரித்துக் கொண்டே போகும் நிலையில், இப்பிரச் சனையில் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. எனவே, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்; மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும்; இலங்கைச் சிறையில் உள்ள மீன வர்களை உடனடியாக விடுவிக்கவும், இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட படகு களை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பி னர் கே.ஜி. பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் க. கருணாகரன், தாலுகா செய லாளர் ஜி. சிவா, மாவட்டக்குழு உறுப்பினர் கள் இ. ஐஸ்டின், ஆரோக்கிய நிர்மலா, மீனவர் சங்கத் தலைவர்கள் வி.பி. சேசுராஜா, எமரிட், சகாயம், காங்கிரஸ் நகரச் செயலாளர் ஜோ. ராஜீவ் காந்தி, சிபிஐ நகரச் செயலாளர் ஆர். செந்தில்வேல், மனிதநேய மக்கள் கட்சி நிர் வாகி செய்யது, மதிமுக நிர்வாகி கராத்தா பழ னிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.