இராமநாதபுரம், ஆக.6 - தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி ஆணை யம் சார்பில், இராமேஸ்வரம் அருகே மண்டபம் வடக்கு கடலோரப் பகுதியில் இருந்து சென்னை மெரீனா கடற்கரை வரை 604 கி.மீ தூரத்திற்கு கடலில் நீந்தி சாதனை படைப்பதற்காக, சென் னையைச் சேர்ந்த 15 சிறப்பு குழந்தைகள், பயிற்சி யாளர்களுடன் மண்டபம் பகுதிக்கு வந்தனர்.
இதனையடுத்து கடலில் நீச்சல் பயண துவக்க விழா, மண்டபம் வடக்கு கடலோரப் பகுதி யில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீனவ சங்கத் தலைவர் அன்பழகன் தலைமை வகித் தார். வேளச்சேரி மாவட்ட விளையாட்டு அலு வலர் லோகநாதன் வரவேற்றார்.

இதுகுறித்து பயிற்சியாளர் லோகநாதன் கூறுகையில், “தினமும் காலை 6 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை, 12 மணிநேரம் நீச்சல் பயணம் இருக்கும். பின்னர் ஒவ்வொரு இரவும் தொண்டி, காட்டுமாவடி, வேளாங் கண்ணி, தரங்கம்பாடி, பழையாறு, பரங்கிப் பேட்டை, புதுச்சேரி, மரக்காணம், மகாபலிபுரம், ஈச்சம்பாடி உள்பட கடல் கரையோரம் அருகே யுள்ள பகுதிகளில் தங்குவதற்கு திட்டமிட்டு உள்ளோம். 11 நாட்கள் நீந்தி ஆக.15 ஆம் தேதி சுதந்திர நாளன்று சென்னை மெரீனா கடலோரப் பகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்” என்றார்.