districts

img

காப்பீட்டு கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், நவ.26- இராமநாதபுரத்தில் அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பாக  விவசாயத்தையும், விவசாய தொழிலா ளர்களையும் பாதுகாப்போம், முறைசாரா தொழிலாளர்களை பாதுகாப்போம், மத்திய  அரசு பொதுத் துறைகளை தனியார்மய மாக்க கூடாது.

விவசாயிகளின் கடன்களை  தள்ளுபடி செய்ய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற  கோரிக்கைகளுக்காக இராமநாதபுரம் எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்  பிரதாப் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினார். கிளை பொறுப்பாளர் ராஜேஷ் செல்வகுமார் நன்றி கூறினார்.