இராமநாதபுரம், டிச.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாள ராக ஆர்.குருவேல் தேர்வு செய்யப் பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட 24 ஆவது மாநாடு. டிச.20,21,22 ஆகிய நாட்களில் பரமக்குடியில் சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கில் நடைபெற்றது. மூத்த தோழர் ஏ.நாக நாதன் செங்கொடியை ஏற்றி வைத்தார்.
மாநாட்டிற்கு முத்துராமு, அம்ஜத்கான், வைஷ்ணவி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.கலையரசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். வரவேற்புக்குழு தலைவர் டி.கே.பலராமன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் துவக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை அரசியல் ஸ்தாபன வேலை அறிக்கையையும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குருவேல் வரவு- செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி வாழ்த்துரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் நிறைவுரையாற்றினார். தி. இராஜா நன்றி கூறினார்.
புதிய மாவட்டக்குழு
இம்மாநாட்டில் 29 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக ஆர். குருவேல் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக வி.காசிநாததுரை, நா.கலையரசன், எம்.சிவாஜி, எம்.ராஜ்குமார், வி.மயில்வாகணன், கே.கருணா கரன், இ.கண்ணகி, தி.இராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.