districts

img

ஆசியா பசிபிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இராஜபாளையம் மாணவருக்கு வரவேற்பு

இராஜபாளையம், டிச.11- ஆசியா பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டிகள் நான்கு ஆண்டு களுக்கு ஒரு முறை நடை பெறுவது வழக்கம். இந்த போட்டியில் இராஜபாளை யம் அருகே உள்ள வன்னி யம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் ராக்கப்பன் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்.  

இந்தியா சார்பில் விளை யாடி 400 மீட்டர் ஓட்ட பந்த யத்தில் வெள்ளிப் பதக்க மும், 200 மீட்டர் ஓட்ட பந்த யத்தில் வெண்கல பதக்க மும், 100 மீட்டர் ஓட்ட பந்த யத்தில் வெள்ளி பதக்கமும் பெற்று இந்திய அணிக்காக விளையாடிய ராக்கப்பன் இராஜபாளையம் வருகை தந்தார். அவரை பகிர்வு அறக் கட்டளை சார்பில் செல்வ குமார் தலைமையில் சிறப் பான வரவேற்பு அளிக்கப்பட் டது.  

இம் மாணவர் சென்னை செயின்ட் ஜோசப் கல்லூ ரியில் எம்.காம் படித்து வருகிறார். இவரது கல்விச்  செலவு முழுவதும் இராஜ பாளையம் ராம்கோ நிறு வனம் ஏற்றுக் கொண்டுள் ளது குறிப்பிடத்தக்கது.