புதுக்கோட்டை, செப்.15- கபாடி வீரர்கள், வீராங்கனை களின் எதிர்காலத்தைக் கருத் தில் கொண்டு அவர்களுக்கு காப் பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த லாமா என்பது அரசின் பரிசீலனை யில் உள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யம் சார்பில் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டியில் வெற்றி பெற்ற 60 நபர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடை பெற்றது. இதில் விளையாட்டு மேம் பாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் பரிசுகளை வழங்கி சிறப்பு ரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தiமையில் நடைபெற்ற இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பி னர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வ கோட்டை) வை.முத்துராஜா (புதுக் கோட்டை) மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்டடோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் மெய்ய நாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அடுத்த ஆண்டு பாடத்திட்டத் தில் சிலம்பத்தை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல் லப்படும் தமிழ்நாட்டில் பல சிலம்ப ஆசான்கள் மிகச் சிறப்பாக பணி யாற்றி வருகிறார்கள். முதற்கட்ட மாக தமிழ்நாட்டில் 100 பேர் தேர்வு செய்து ஒரு சிலம்ப ஆசானுக்கு ஒரு லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் விரைவில் முதல்வரால் வழங்கப் படும். எலைட் ஸ்கேன்ஸ் என்ற திட்டத்தின் கீழ் ஒலிம்பிக் போட்டி யில் பங்கேற்கும் வீரர்களுக்கு பயிற்சி பெறுவதற்காக ஆண் டிற்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப் பட்டும் திட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம். கபாடி வீரர்கள் வீராங்கனைகள் களத்திற்கு செல்வதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளி யிடப்பட்டுள்ளது. அந்த அடிப்ப டையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கூறி யுள்ளனர். எதிர்காலத்தில் கபாடி விளையாட்டு வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் பரி சோதனைக்கு உட்பட வேண்டும். மேலும் அவர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தலாமா என்பதும் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.