அறந்தாங்கி, டிச.10-
பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்களை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வர்த்தக சங்கம் சார்பாக அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
அறந்தாங்கி வர்த்தக சங்க தலைவர் ரெ.தங்கதுரை ஒரு லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அறந்தாங்கி வட்டாட்சியர் திருநாவுக்கரசிடம் ஒப்படைத்தார். இதில் வர்த்தக சங்க செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.