districts

img

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அறிவியல் தினம் கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. திருக்களம்பூர், கருப்புக்குடிபட்டி, தொட்டியம்பட்டி, ஜெ.ஜெ. நகர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதிய கிளைகள் துவங்கப்பட்டன. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் இராசு, புவியரசு, மணிக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.