districts

img

மணல் குவாரி அமைத்துத் தரக் கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்

அறந்தாங்கி, ஜூலை 14 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதிகளில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைத்து தரக்கோரி அறந் தாங்கி கோட்டாட்சியர் அலுவலக வாயிலில் மாட்டுவண்டி தொழிலா ளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.  போராட்டத்திற்கு மாட்டுவண்டி தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் சிதம்பரம் தலைமை வகித்தார். பொருளாளர் சந்தானம் முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் போராட் டத்தை துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் அன்பு  மணவாளன், விவசாயிகள் சங்க  மாவட்டப் பொருளாளர் சி.சுப்ரமணி யன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கள் தென்றல் கருப்பையா, நெருப்பு  முருகேஷ் ஆகியோர்  கோரிக்கை களை விளக்கி பேசினர்.  நூற்றுக்கணக்கான தொழிலாளர் கள் மாட்டுவண்டியை ஆர்டிஓ அலு வலகம் எதிரே நிறுத்திவிட்டு, அலுவ லக வாயிலில் அமர்ந்து போராட்டம்  நடத்தினர். பின்னர் போராட்ட இடத் திற்கு வந்த கோட்டாட்சியர் சொர்ண ராஜ், பொதுப் பணித்துறையிடம் பேசி இருக்கிறேன். ஆகஸ்ட் 5 ஆம்  தேதி மாட்டுவண்டியில் மணல் அள்ள  அனுமதி அளிக்கப்படும் என உறுதி யளித்த பின் போராட்டம் நிறைவு செய்யப்பட்டது.