புதுக்கோட்டை, டிச.21-
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெள்ளிக்குடிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாமினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார்.