districts

img

விளாரிப்பட்டியில் புதிய மின்மாற்றி எம்.சின்னதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை, மார்ச் 6-  புதுக்கோட்டை மாவட் டம் கறம்பக்குடி அருகே புதிய மின்மாற்றியை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை திங்களன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் கறம்பவிடுதி ஊராட்சிக்கு உட்பட்டது விளாரிப்பட்டி கிராமம். இங்கு போதிய மின்சாரம் கிடைக்காமல் அப்பகுதி விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையின் முயற்சி யால் அப்பகுதியில் புதிய மின்மாற்றி தமிழ்நாடு மின்  சார வாரியத்தால் அமைக் கப்பட்டது. புதிய மின்மாற்றியை பொதுமக்களின் பயன் பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை திங்கள்கிழமையன்று தொடங்கி வைத்தார். திமுக ஒன்றியச் செயலாளர் முத்து கிருஷ்ணன், உதவி மின்  பொறியாளர் கே.முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.