புதுக்கோட்டை, மார்ச் 18- அரசுப் பள்ளிகளின் கட்ட மைப்பு வசதிகளுக்காக தொடர்ந்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துவரும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கந்தர்வ கோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக உள் ளார் எம்.சின்னதுரை. இவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டது முதல் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கணிசமான தொகை யை அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்காக வும், அரசு மருத்துவமனை களின் கட்டமைப்பு வசதி களுக்காகவும் ஒதுக்கீடு செய்து வருகிறார். கிரா மப்புற ஏழை, எளிய மக்க ளின் மருத்துவத்திற்காக வும், ஏழை பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காகவும் அதிக நிதி ஒதக்கீடு செய்து வரும் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரைக்கு பல் வேறு தரப்பினரும் பாராட் டுக்களைத் தெரிவித்து வரு கின்றனர். இதனைத் தொடர்ந்து கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோமாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, தச்சங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மஞ்சப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரியாணிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புதுநகர் ஊராட்சி ஒன்றி யத் தொடக்கப்பள்ளி, சுந் தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வேலாடிப் பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகளை வெள்ளிக் கிழமையன்று சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார். மேலும், புனல்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக் கப்பள்ளிக்கு ரூ.15 மதிப் பீட்டில் சுற்றுச்சுவர் மற்றும் கேட், காட்டுநாவல் ஆதிதிரா விடர் தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற் குடை, நெப்புகை பிடாரி அம்மன் கோவில் அருகில் கலையரங்கம் உள்ளிட்ட பணிகளையும் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார். நிழக்வுகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி தலைமை வகித் தார். திமுக மாவட்டச் செய லாளர் கே.கே.செல்லப் பாண்டியன், வட்டாட்சியர் ராஜேஸ்வரி, ஒன்றியக் குழுத் தலைவர் கார்த்திக், வட்டார வளர்ச்சி அலு வலர்கள் திலகவதி, நளினி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், ஒன்றியச் செயலாளர்கள் வி.ரெத்தினவேல், ஜி.பன் னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.