districts

img

கல்லூரிக்குச் சென்று வர பேருந்து வசதி வேண்டும் மாணவர் சங்கம் கையெழுத்து இயக்கம்

புதுக்கோட்டை, டிச.11 - ஆலங்குடி அருகே கீழாத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூ ரிக்குச் சென்று, வர வசதியாக பேருந்து வசதி வேண்டும் எனக் கோரி இந்திய மாண வர் சங்கம் சார்பில் புதன்கிழமை கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூரில் பட்டுக்கோட்டை சாலை யில் இயங்கி வருகிறது அரசு கலை அறிவியல்  கல்லூரி. இக்கல்லூரிக்கு சுற்று வட்டாரத்தில்  இருந்து மாணவ, மாணவிகள் சென்று வரும்  வகையில் போதுமான பேருந்து வசதிகள் இல்லை. இக்கல்லூரிக்கு கீரமங்கலத்தில் இருந்து கொத்தமங்கலம், வெள்ளாகுளம், கீழாத்தூர், கே.ராசியமங்கலம், வெட்டன் விடுதி வழியாக கறம்பக்குடிக்கும், ஆலங் குடியில் இருந்து கீழாத்தூர், வடகாடு, மாங்காடு, அணவயல், ஆவணம் வரையி லும் கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சென்று வரும் வகையில் அரசு நகரப் பேருந்து களை இயக்க வலியுறுத்தி புதன்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ஆர்.வசந்தகுமார் தலைமையில் நடை பெற்ற கையெழுத்து இயக்கத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.வாசு தேவன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆ. குமாரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கையெழுத்துகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை அமைச்சர், மாவட்ட  ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் அளிக்க  உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ள  னர்.