districts

img

மக்களின் அடிப்படை பிரச்சனைகளை கேட்டறிந்த எம்.சின்னதுரை எம்எல்ஏ

புதுக்கோட்டை, மே 12-  புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக் காடு ஊராட்சிக்குட்பட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை கந்தவர்கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்ன துரை வியாழனன்று கேட்டறிந்தார். முத்துக்காடு கிராமத்தில் சாலை, மின்சாரம், பேருந்து வசதி கள் முறையாக இல்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் கடந்த பல வருடங்களாக போராடி வரு கின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்த லிலும் இக்கோரிக்கையை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரையிடம் வைத்தனர்.  தேர்தலில் வெற்றிபெற்ற எம். சின்னத்துரை ஒவ்வொரு கிராமங்க ளாகச் சென்று தொகுதிக்குட்பட்ட மக்களின் பிரச்சனைகளை கேட்ட றிந்து வருகிறார். இந்நிலையில், வியாழனன்று முத்துக்காடு கிராமத்திற்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பழுதடைந்துள்ள அங்கன்வாடி கட்டிடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து சம்பந் தப்பட்ட அதிகாரிகளுடன் தொ டர்புகொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தினார். இதில், திமுக ஒன்றியச் செயலா ளர் மாரிமுத்து, ஊராட்சிமன்றத் தலைவர் முத்தையா, மாவட்டக் கவுன்சிலர் பழனிச்சாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கே.சண்முகம், சி.அன்புமண வாளன், மாவட்டக்குழு உறுப்பி னர் டி.சலோமி, ஒன்றியச் செயலா ளர் எம்.ஆர்.சுப்பையா, ஒன்றியக் குழு உறுப்பினர் ரகுபதி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.