districts

img

வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி

புதுக்கோட்டை, டிச.10:-  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆகியவை இணைந்து நடத்தும், வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி புதுக் கோட்டை கலைஞர் கருணாநிதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமையன்று நடை பெற்றது.

இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சி யர் மு.அருணா தொடங்கி வைத்து, வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி குறித்த கையேட்டினை வெளியிட்டார். பின்னர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற போட்டித் தேர்வு வகுப்பில் பயிற்சி பெற்று, காவல் துணை ஆய்வா ளர் பணியிடத்திற்கு தேர்ச்சி பெற்ற மாணவிக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோ.மணிகண்டன், பெ.வேல்முரு கன் (தொ.வ), கல்லூரி முதல்வர் (பொ) ச.ஞானஜோதி, உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி) மா.சுந்தர கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.