districts

img

புதுகை கீழத்தானியத்தில் ஜல்லிக்கட்டு: 17 பேர் காயம்

பொன்னமராவதி, பிப்.3- புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள கீழத்தானியத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், மாடுபிடி வீரர்கள் உட்பட 17 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி தொடங்கி வைத்தார். திருச்சி, திண்டுக் கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 155 மாடுபிடி வீரர்கள், 539  காளைகள் கலந்து கொண்டனர். இதில் மாடுபிடி வீரர்கள் 6, பார்வையாளர்கள் 2, மாட்டின் உரிமையாளர்கள் 9 பேர் உள்பட 17 பேர் காயமடைந்தனர்.