districts

img

பெண்களே பெண்களை இழிவாகப் பேசுவதை கண்டித்தவர் பாரதி!இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு

புதுக்கோட்டை, டிச. 11 -  பெண்களே பெண்களை இழிவாகப்  பேசுவதை கண்டித்தவர் கவிஞர் பாரதி என்றார் இயக்குநர், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்.

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தின் 2 ஆம் ஆண்டுத் தொடக்க விழா  மற்றும் மகாகவி பாரதியாரின் 142  ஆவது பிறந்த நாள் விழா கைக் குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கலை அறிவி யல் கல்லூரியில் புதன்கிழமை நடை பெற்றது. விழாவுக்கு, கல்லூரியின் தலைவர்  குரு.தனசேகரன் தலைமை வகித்தார். பாரதி கல்விக் குழுமம் சார்பில் புதுக் கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்திக்கு ‘பாரதி விருது’ வழங்கப்பட்டது. ரூ.10 ஆயி ரம் பொற்கிழி மற்றும் கேடயம் ஆகிய வற்றை உள்ளடக்கி இவ்விருது வழங்கப் பட்டது.

‘பாரதி யார்?’ என்ற தலைப் பில் இயக்குநர், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை ஆற்றினார்.  அவர் பேசுகையில், “பெண்க ளுக்கு கல்வி வழங்க வேண்டும் என்று  முதன் முதலில் குரல் கொடுத்த கவி ஞர் பாரதி. பாரதி ஒரு கவிஞர், தேச பக்தர், நாவலாசிரியர், சிறுகதை ஆசிரி யர், கட்டுரையாளர், பத்திரிகையாளர். தன் வாழ்நாளில் 16 ஆயிரம் பக்கங் களை, பல்வேறு மொழிகளிலிருந்து மொழியாக்கம் செய்த மொழி பெயர் ப்பாளர். விதவை மறுமணத்தைப் பற்றிப் பேசிய முதல் கவிஞர் பாரதி தான்.  

எவையெல்லாம் அன்று பெண் களுக்கு மறுக்கப்பட்டதோ அதைப் பற்றியெல்லாம் பேசியவர் பாரதி. பெண்களே பெண்களை இழிவாகப் பேசுவதை கண்டித்தவர் பாரதி. பெண் களுக்கு தோற்றம் மட்டுமே அழகல்ல. கல்வியும், வாசிப்பும், மானமுமே அழகு என்று அறிவுரைத்தவர் பாரதி” என்றார். விழாவில், பேரா.மு.கருப்பையா, கவிஞர் சு.பீர்முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பேரா. மு.பாலசுப்பிரமணியன் வரவேற்க, தமிழ்ச் சங்க செயலர் மகாசுந்தர் நன்றி  கூறினார்.